/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தூனேரி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : மார் 18, 2024 11:34 PM

மஞ்சூர்;மஞ்சூர் அருகே குந்தா துானேரி கிராமத்தில் நடந்த மாரியம்மன் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மஞ்சூர் அருகே, குந்தா துானேரி, மட்டக்கண்டி கிராமங்களில் ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு திருவிழாவை ஒட்டி கடந்த, 15ம் தேதி குந்தா துானேரி கிராமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று, கிராமத்தில் உள்ள நாராயண மூர்த்தி கோவிலில் காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.
தொடர்ந்து, ஊர் தலைவர் ராமன் தலைமையில், 10:00 மணியளவில் கிராம மக்கள் புடைசூழ புனித நீர் எடுத்துவரப்பட்டு விநாயகர் மற்றும் நாராயணமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பின், சுவாமி அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மக்கள் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர்.
மாலையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு நடனமாடி மகிழ்ந்தனர். அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இன்று, 19ம் தேதி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.