/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விடுதி மாணவிகளுக்கு தளவாட பொருட்கள்
/
விடுதி மாணவிகளுக்கு தளவாட பொருட்கள்
ADDED : ஆக 08, 2025 08:29 PM

பந்தலுார்; பந்தலுார் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி விடுதியில் படிக்கும் மாணவிகளுக்கு, 'ரோட்டரி கூடலுார் புளூ மவுண்டன்' சார்பில், தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் தனராஜ் தலைமை வகித்து, மாணவிகள் குறிக்கோளுடன் படிக்க வேண்டியது அவசியம், படிப்பில் கவனம் செலுத்தினால் உயர்கல்விக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து, பேசினார்.
வக்கீல் அப்சல்ஜா, சிறப்பான கல்வியால் எதிர்காலத்தில் கிடைக்கும் பயன்கள் மற்றும் வேலை வாய்ப்புகள், சிறப்பான வாழ்க்கை குறித்து விளக்கி, பேசினார். இந்தியன் வங்கி மேலாளர் காந்தி, மாணவிகளுக்கான தளவாட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், விடுதி காப்பாளர் நான்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

