/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 31 பேருக்கு ரூ.71.85 லட்சம் கடனுதவி
/
ஊட்டியில் 31 பேருக்கு ரூ.71.85 லட்சம் கடனுதவி
ADDED : டிச 19, 2025 05:22 AM
ஊட்டி: ஊட்டியில் மாவட்ட தொழில் மையம் சார்பில், புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், நடந்த கடன் வசதியாக்கல் முகாமில், 31 பயனாளிகளுக்கு, 71.85 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கி பேசியதாவது:
புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கடன் வசதியாக்கல் முகாம் தொடங்கி வைக்கப்பட்டு, வியாபாரம் சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வம் உடைய தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான கடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் ஆண்டு இலக்கினை எய்திட, மாவட்ட தொழில் மையம் மூலம், செயல்படுத்தி வரும் கலைஞர் கைவினை திட்டத்தில், வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு கடன் ஒப்படைப்பு ஆணை பெறுவதற்கும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமளிப்பு திட்டத்தில் புதிதாக விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முகாமில் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சுயத்தொழில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, தொழில் முனைவோருக்கு கடன் உதவி பெற்று பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யானந்த கல்கி, மாநில கடன் வசதி ஆலோசகர் வணங்காமுடி மற்றும் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் திலகவதி உட்பட, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

