/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியின் உயிர் சூழலை பாதுகாத்திட உறுதி ஏற்போம்! இயற்கை சார் வேளாண்மையில் ஆர்வம் கொள்வோம்
/
நீலகிரியின் உயிர் சூழலை பாதுகாத்திட உறுதி ஏற்போம்! இயற்கை சார் வேளாண்மையில் ஆர்வம் கொள்வோம்
நீலகிரியின் உயிர் சூழலை பாதுகாத்திட உறுதி ஏற்போம்! இயற்கை சார் வேளாண்மையில் ஆர்வம் கொள்வோம்
நீலகிரியின் உயிர் சூழலை பாதுகாத்திட உறுதி ஏற்போம்! இயற்கை சார் வேளாண்மையில் ஆர்வம் கொள்வோம்
ADDED : பிப் 20, 2024 06:06 AM

ஊட்டி: 'இயற்கை விவசாயம் மேற்கொள்ள அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், இயற்கை சார்ந்த வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அனைத்து பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து விவசாய பெருமக்களும் இயற்கை சார்ந்த வேளாண்மையினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இயற்கை விவசாயத்தை மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது.
மண் பரிசோதனை அவசியம்
இயற்கை விவசாய மேற்கொள்ளும் இடங்களில் மண் பரிசோதனை முக்கிய பங்காக உள்ளது. இதற்காக, 'விவசாயிகள் மத்தியில் முன்மாதிரி சேகரிப்பது எப்படி; நுண்ணுாட்ட சத்து ஆய்வுக்கு மண் மாதிரி எப்படி எடுப்பது; பாசன நீர் எடுக்கும் முறை; மண்வளத்தை பாதுகாத்து சமச்சீர் உரம் இட்டு, உர செலவினை கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெற தேவையான விழிப்புணர்வுகளை விவசாயிகள் மத்தியில் தோட்டக்கலை துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
உறுதி ஏற்போம்!
இதன் ஒரு பகுதியாக, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவில் அங்கக வேளாண்மை கருத்தரங்கு; இயற்கை விவசாய விளை பொருட்கள் வாரசந்தை துவக்க நிகழ்ச்சி நடந்தது.
அதில், கலெக்டர் அருணா பேசுகையில்,''நீலகியில் சுற்றுசூழலை பாதுகாத்திட இயற்கை சார் வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறை மூலம் இயற்கை விவசாயத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு தேவையான மானிய திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். இயற்கை விவசாயம் மேற்கொள்ள அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்,'' என்றார்
ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மலை காய்கறி வகைகள், 'ஆர்கானிக் டீ' உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டது, பொதுமக்களும் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, இணை இயக்குனர் அஸ்ரப் பேகம் மற்றும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

