/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி ;கோத்தகிரியில் வனத்துறை விசாரணை

ADDED : ஜூலை 14, 2025 08:48 PM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி, சிறுத்தை பலியானது தொடர்பாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோத்தகிரி தாலுகா நெடுகுளா கிராமம், பேரகணி காவல் பகுதிக்கு உட்பட்ட, நாரகிரி பகுதியை சேர்ந்த, தங்கராஜ்,62, என்பவருக்கு சொந்தமான பட்டா விவசாய நிலத்தில் நான்கு வயதுடைய பெண் சிறுத்தை வேலி சுருக்கு கம்பியில் சிக்கி பலியாகி உள்ளது.
கட்டபெட்டு ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில், வனவர்கள் பிரகாஷ், வினோத்குமார், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், வினோத் மற்றும் காமராஜ் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, முதுமலை புலிகள் காப்பக மருத்துவர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்த பின், அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.
வனத்துறையினர், வழக்கு பதிவு செய்து, இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.