/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு
/
தேசிய கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு
தேசிய கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு
தேசிய கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 26, 2024 11:19 PM

குன்னுார் : தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
குன்னுாரில் உள்ள 'ஆலன் திலக்' கராத்தே பயிற்சி மைய மாணவ, மாணவியர், கோவை ஜி.ஆர்.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கடந்த 21, 22ம் தேதிகளில் நடந்த தேசிய அளவிலான 'மோசஸ் திலக்' நினைவு சாம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் பங்கேற்றனர். அதில், ஜோஷ்நிதா, மிதுன் குரு, ரிஃபா தஸ்னீம் ஆகியோர் குமுத்தே மற்றும் கட்டா பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்களம் இரண்டையும் வென்றனர்.
நட்சத்திராஸ்ரீ, ஷணவ் கிருஷ்ணா, பிரனிதா, சுதீக் ஷன், பிரவீன், சுதீப், மாதேஷ்வரன், ஆஷினிஸ்ரீ நிலாஷா, புனிதா, கோஷி தீபக், ஜனார்த், தனிஷ்கா, ஷாஜன் ஜெரோம், தர்ஷித், நிவாஷ் ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஷரிபா, ஸ்டான்ஷில், ஷனாபர், திரன்குமார், இமானுவேல் ஆகியோர் வெள்ளியும், ஜெய் தர்ஷினி, தியா தீபக், முன்சா, நபீனா வெண்கலமும் வென்றனர். 18 வயதிற்கு மேற்பட்டோரில் யுவனேஷ்வரன், ஹரிபிரியா வெள்ளியும், விஷ்ணுபிரசாத் வெண்கலமும் வென்றனர்.
குமுத்தே, கட்டா ஆகிய பிரிவுகளில் சாதித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும், குன்னுார் சி.எஸ்.ஐ., மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சதித்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ஜோசப் பாக்கிய செல்வம், பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள் நித்யா, ஜான், நவீன், செந்தில்குமார், ரீனா உட்பட பலர் ஏற்பாடுகளை செய்தனர்.

