/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
/
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
ADDED : மார் 15, 2024 11:10 PM
ஊட்டி:முருகன் கோவில்களில் கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது.
ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில்உள்ளிட்ட மாவட்டத்தில் பிற முருகன் கோவில்களில் மாதந்தோறும் நடக்கும்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நேற்று கிருத்திகை விழாவை ஒட்டி அன்னமலை முருகன் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில்களில் காலை,6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது,
தொடர்ந்து, 10:00 மணிக்கு முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 12 அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
விரதம் இருந்த பக்தர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். பின், பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

