/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
/
கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ADDED : நவ 20, 2024 10:02 PM
கூடலுார்; நடுகூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுபாட்டை இழந்த, 'டான்டீ'க்கு சொந்தமான வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நடுவட்டம் அரசு தேயிலை தோட்டத்தில் (டான்டீ) நேற்று முன்தினம், பறிக்கப்பட்ட பசுந்தேயிலையை, டான்டீக்கு சொந்தமான 'பிக்-அப்' வாகனத்தில் ஏற்றி கொண்டு, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, பாண்டியார் டான்டீ தேயிலை தொழிற்சாலைக்கு ஊழியர்கள் எடுத்து சென்றனர்.
வாகனம் நடு கூடலுார் அருகே, வளைவான பகுதியில் கட்டுப்பாட்டு இழந்து, சாலையோர தடுப்பின் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், வாகனம் சேதமடைந்தது; ஓட்டுனர் ஜெகதீஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.