தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கட்டாயமாகுமா?

 கட்டாயமாகுமா?

 கட்டாயமாகுமா?


ADDED : டிச 01, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உணவில் கலப்படத்தை தடுக்க 'அக்மார்க்' தரச்சான்று நுகர்வோருக்கு தரமான பொருட்களை உறுதி செய்ய

உ ணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உணவு தயாரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனை குறித்த தெளிவான விதிமுறைகள் இருந்தபோதிலும்,

சந்தைகளில் தரமற்ற மற்றும் கலப்பட உணவு பொருட்கள் பரவலாக காணப்படுகிறது.

மசாலா, தானிய மாவு, சத்து மாவு, தாவர எண்ணெய், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்களில், செயற்கை நிறங்கள், ரசாயனங்கள், தரமற்ற சேர்க்கைகள் கலக்கப்படுகின்றன.

நோய் பாதிப்பு இத்தகைய உணவு பொருட்கள் மனித உடல்நலத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி, ஒவ்வாமை, ஹார்மோன் சீர்கேடு, நரம்பியல் பாதிப்புகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு, நீண்டகாலத்தில் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு காரணமாவது ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு சட்டப்படி, உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய பாதுகாப்பற்ற மற்றும் கலப்பட உணவு தயாரித்தல், விற்பனை செய்தலுக்கு,7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது.

எனினும், தற்போதைய சூழலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குறைவு, மாதிரி பரிசோதனை ஆய்வக வசதிகள் போதாமை, தொழில்நுட்ப உபகரணங்கள் பற்றாக்குறை, முறையான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கம் இல்லாமை நீடிப்பதால், கலப்பட உணவுகள் சந்தையில் தாராளமாக உள்ளன.

தொழில்நுட்ப வசதி அவசியம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவது கட்டாயமாக இருந்தாலும், உணவு தரத்தை குறிப்பிடுவதில்லை. எனினும், இதனை 'தரச்சான்று' என நுகர்வோர் தவறாக நம்புகின்றனர். இதற்கு தீர்வு காண அரசால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்று முறையை கட்டாயப்படுத்த மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''விவசாய அமைச்சகத்தின் கீழ், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட உணவு பொருட்களுக்கு, கடுமையான தரநிலைகள் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் அக்மார்க் தர சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு பொருட்களை உறுதி செய்கிறது.

மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள், கோதுமை, அரிசி மாவுகள், சத்து மாவுகள் உள்ளிட்ட விவசாயத்தை அடிப்படையாக கொண்ட அனைத்து உணவு பொருட்களுக்கும் அக்மார்க் தரச்சான்று கட்டாயமாக்கும் சட்ட நடவடிக்கை தேவை.

மாவட்ட அளவில் அரசு உணவு பரிசோதனை கூடங்களை அதிகரிக்க செய்து, மக்கள் குறைந்த கட்டணத்தில் உணவு பொருட்களை பரிசோதிக்க வசதி ஏற்படுத்தி, ஆய்வகங்களில் மனிதவளம், தொழில்நுட்ப வசதி மேம்படுத்த வேண்டும்.'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us