/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயிர்களை காத்திட காப்பீடு அவசியம்: தோட்டக்கலை அறிவுரை
/
பயிர்களை காத்திட காப்பீடு அவசியம்: தோட்டக்கலை அறிவுரை
பயிர்களை காத்திட காப்பீடு அவசியம்: தோட்டக்கலை அறிவுரை
பயிர்களை காத்திட காப்பீடு அவசியம்: தோட்டக்கலை அறிவுரை
ADDED : பிப் 20, 2024 06:08 AM
ஊட்டி: 'தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதுடன், உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், தோட்டக்கலை பயிர்கள் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை மானியத்துடன் செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களுடைய தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க தோட்டக்கலை துறை சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
தோட்டக்கலை அதிகாரிகள் கூறும் அறிவுரைகள்:
பசுமைக்குடிலை அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளின் மூலம் இணைக்க வேண்டும். நிழல் வலைக்குடில்கள் கிழிந்து போனால் தைத்து சரி செய்ய வேண்டும். மிளகு சாகுபடிக்கு உரிய வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும்.
கிராம்பு, ஜாதிக்காய்க்கு நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். காற்றினால் வாழைக்கு அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை உடனே அறுவடை செய்ய வேண்டும். இதர பயிர்களான மரவள்ளி, முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, உருளைகிழங்கு, வாழை மற்றும் கேரட் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். உள்ளிட்ட அறிவுரைகள் கடைப்பிடிக்க வேண்டும்.

