/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தல்
/
நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தல்
நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தல்
நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 20, 2025 08:51 AM
கூடலுார்: மாநிலத்தில், பல்கலை கழகங்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த, கூடலுார் உட்பட,41 உறுப்பு கல்லுாரிகள், 2019ல் அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது .
தொடர்ந்து, அங்கு பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காததுடன், ஆண்டுக்கு, 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் பணிவு முறிவு காலமாக அறிவித்து சம்பளம் வழங்கப்படுவதில்லை.
நடப்பாண்டு இக்கல்லுாரிக ளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அலுவலக பணியாளர்களுக்கு ஏப்., முதல் (மே மாதம் தவிர்த்து) நவ., வரை, 7 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங் க வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நிலுவை உள்ள, 7 மாத சம்பளத்தில், தற்போது, 4 மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மேலும் மூன்று மாத சம்பளம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், அரசு உத்தரவை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கல்லுாரி பணியாளர்கள் கூறுகையில், 'உறுப்பு கல்லுாரிகளில், 15 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றி வருகிறோம். நடப்பாண்டு நிலுவையில் உள்ள ஏழு மாத சம்பளத்தில், தற்போது நான்கு மாத சம்பளம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மேலும் மூன்று மாதம் சம்பளம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
எனவே, நிலுவை சம்பளத்தை வழங்குவதுடன், சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

