sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஜாதி வெறியால் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: முத்தரசன் ஆதங்கம்

/

ஜாதி வெறியால் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: முத்தரசன் ஆதங்கம்

ஜாதி வெறியால் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: முத்தரசன் ஆதங்கம்

ஜாதி வெறியால் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: முத்தரசன் ஆதங்கம்


ADDED : மார் 10, 2024 11:05 PM

Google News

ADDED : மார் 10, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:ஜாதிப்பற்றால், ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன, என அன்னுாரில் இ. கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

அன்னுார் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில், கடந்த மாதம் மறைந்த இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி படத்திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் இ.கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியதாவது :

தமிழகத்தில் ஜாதி பற்று அதிகரித்துள்ளது. ஜாதி வெறியால்,பெற்ற தாய், தந்தையே, தங்களது மகள் அல்லது மகனை கொலை செய்கின்றனர். கடந்த வாரம் கூட சத்தியமங்கலத்தில் ஜாதி பற்றால் அப்பாவி மாணவி உயிரிழந்தார்.

கடவுளை காட்டி சிலர் அரசியல் செய்கின்றனர். ஏழை எளிய மக்களுக்கு வங்கி கடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திராகாந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். ஆனால் தற்போது ஏழை, எளிய மக்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. பணம் படைத்த முதலாளிகளுக்கு மட்டும் தான் வங்கி கடன் தருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட புதிதாக துவக்கப்படவில்லை. ஆனால் ஏற்கனவே இருந்த தேசிய பஞ்சாலை, கோவையில் இருந்த மத்திய அரசு அச்சகம் என பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. மற்றொரு தேர்தல் ஆணையரும் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் தேர்தல் தவறாக நடத்தப்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆறுச்சாமி, ம.தி.மு.க., காங்., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us