/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள் பாறை சரிந்து வீடு சேதம்
/
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள் பாறை சரிந்து வீடு சேதம்
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள் பாறை சரிந்து வீடு சேதம்
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள் பாறை சரிந்து வீடு சேதம்
ADDED : ஜன 02, 2025 12:51 AM

கோத்தகிரி; கோத்தகிரி குயின் சோலைபகுதியில் அரசு தேயிலை தோட்ட நிறுவனம் (டான்டீ)அமைந்துள்ளது. இங்குள்ளதொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில், 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
நிரந்தர தொழிலாளர்கள் இங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அபாயகரமான நிலையில் இருந்த பாறை சரிந்து விழுந்தது. அதில், கனகராஜ் என்பவரது வீட்டின் சமையலறைசுவர், முழுமையாக இடிந்து சேதமடைந்தது. குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.அதே இடத்தில், மற்றொரு பாறையும் தொங்கிக் கொண்டு இருப்பதால், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
'விழும் நிலையில் உள்ள பாறையை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார்
பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்று வீசியது. மேஸ்திரிகுன்னு என்ற இடத்தில் விஜய பாண்டியன் என்பவர் வீட்டின் மீது மரம் விழுந்து சேதமானது. வீட்டிற்குள் யாரும் இல்லாத நிலையில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. குடியிருப்பு முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ. மாரிமுத்து ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அதேபோல், மஞ்சூர் அருகே, அப்பர்பவானி, அவலாஞ்சி சாலையில் பலத்த காற்றுக்கு மரங்கள் விழுந்தது.

