/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி கோடப்பமந்து கால்வாய் பணிக்காக... ரூ. 10 கோடி ஒதுக்கீடு!நிதி 'கரையாமல்' இருக்க கண்காணிப்பு அவசியம்
/
ஊட்டி கோடப்பமந்து கால்வாய் பணிக்காக... ரூ. 10 கோடி ஒதுக்கீடு!நிதி 'கரையாமல்' இருக்க கண்காணிப்பு அவசியம்
ஊட்டி கோடப்பமந்து கால்வாய் பணிக்காக... ரூ. 10 கோடி ஒதுக்கீடு!நிதி 'கரையாமல்' இருக்க கண்காணிப்பு அவசியம்
ஊட்டி கோடப்பமந்து கால்வாய் பணிக்காக... ரூ. 10 கோடி ஒதுக்கீடு!நிதி 'கரையாமல்' இருக்க கண்காணிப்பு அவசியம்
ADDED : ஏப் 04, 2024 11:44 PM

ஊட்டி:ஊட்டி கோடப்பமந்து கால்வாய் சீரமைப்பு பணி மற்றும் ஏரி துார்வாரும் பணிக்காக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. அதில், 30 வார்டுகளின் கழிவுநீர், பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டு, கோடப்பமந்து கால்வாய் வழியாக வெளியேறுகிறது. 3 கி.மீ., துாரம் உள்ள கோடப்பமந்து கால்வாய் வழியாக வெளியேறும் கழிவுநீர் படகு இல்ல ஏரியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ஏரியில் கலக்கிறது.
நகரில் உள்ள பல குடியிருப்புகளின் குப்பை கழிவுகள் கால்வாயில் கொட்டப்படுவதால் கழிவுநீர் செல்ல போதிய வழி இல்லாமல் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது. மழை சமயத்தில் ஏற்படும் வெள்ளத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், கோடப்பமந்து கால்வாய் மற்றும் படகு இல்ல ஏரியை துார்வாரும் பணிக்கு, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியாக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, கோத்தகிரி சாலையிலிருந்து ஏ.டி.சி., அருகே பாலம், மத்திய பஸ் ஸ்டாண்டு பாலம், படகு இல்ல சுத்திகரிப்பு நிலையம் வரை துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. பின், ஆங்காங்கே தடுப்பு சுவர் அமைத்தல், கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் முடிந்த பின், பொது பணி துறை மூலம் ஊட்டி ஏரியை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி சார்பில் மக்களுக்கு குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதில், 'நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குடியிருப்பிலிருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து வீடுகளில் வைத்தால், நகராட்சி ஊழியர்கள் வந்து சேகரித்து செல்வர்.
வெளியில் வீசி எறிவதால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மழை சமயத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து விடுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எக்காரணத்தை கொண்டும் வெளியிடங்களில் வீசி எறிவதை தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே நடந்த விசாரணை என்னாச்சு?
கடந்த, 2018 ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது கோடப்பமந்து கால்வாயை முழுமையாக சீரமைக்க நகராட்சி சார்பில், 5.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. தரமில்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.
அதற்காக கொண்டு வரப்பட்ட ராட்சத குழாய் உட்பட கட்டுமான பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது, 'சம்மந்தப்பட்ட அதிகாரிகள், கான்ராக்டர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும்,' என, தன்னார்வர்கள் மனு அளித்தனர். ஆனால், இதுவரை விசாரணை நட்டப்படவில்லை.
உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஒதுக்கப்பட்ட, 10 கோடி ரூபாய் நிதி முறையாக பயன்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

