/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜீன்பூல் தாவர மையத்தில் காணப்படும் பறக்கும் ஓணான்; சுற்றுலா பயணிகள் வியப்பு
/
ஜீன்பூல் தாவர மையத்தில் காணப்படும் பறக்கும் ஓணான்; சுற்றுலா பயணிகள் வியப்பு
ஜீன்பூல் தாவர மையத்தில் காணப்படும் பறக்கும் ஓணான்; சுற்றுலா பயணிகள் வியப்பு
ஜீன்பூல் தாவர மையத்தில் காணப்படும் பறக்கும் ஓணான்; சுற்றுலா பயணிகள் வியப்பு
ADDED : ஏப் 08, 2025 07:26 AM

கூடலுார்; கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் மரங்களில் தென்படும், நிறம் மாறும் அரிய வகை பறக்கும் ஓணானை கண்டு சுற்றுலா பயணிகள் வியப்படைகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதி வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாகும். இங்கு காணப்படும் பல அரிய வகை உயிரினங்கள் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ஊர்வன வகையை சேர்ந்த நிறம் மாறும் பறக்கும் ஓணான், காடுகள் மட்டுமின்றி சாலையோரம குறிப்பிட்ட சில மரங்களில் அரிதாக காணப்படுகிறது.
இவை, உயரமான மரத்திலிருந்து, தாழ்வான மரத்துக்கு பறந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் உள்ள, சில மரங்களில் தென்படும் பறக்கும் ஓணான் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், 'பல வகையான ஓணான்கள் பார்த்திருந்தாலும், இங்கு தென்படும் பறக்கும் ஓணானை பார்ப்பது வியப்பாக உள்ளது,' என்றனர்.
வனவிலங்கு ஆர்வலர் சுப்ரமணி கூறுகையில்,''மரங்களை வசிப்பிடமாக கொண்ட பறக்கும் ஓணான் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, மரத்தின் நிறத்துக்கு ஏற்ப தன் உடல் நிறத்தை மாற்றும் திறன் கொண்டது. வாய் அருகே துடுப்பு போன்ற செயல்படும் அமைப்பு இதன் தனித்துவத்தை உணர்த்துகிறது. விஷத்தன்மை இல்லாத இவைகளை, சிலர் விஷ ஜந்துக்கள் என, நினைத்து அடித்து கொள்கின்றனர். அழிந்து வரும் இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

