ADDED : அக் 07, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார், - குன்னுார் உபதலை ஊராட்சியில், 20 ஆண்டுகளாக பம்ப் ஆபரேட்டராக பணி புரிந்தவர் குஞ்ஞாபு,57. நேற்று காலை, 6:30 மணியளவில் இவர் குடிநீர் குழாய் திறந்து விட்டு வந்துள்ளார். அப்போது, 'அங்குள்ள கிருஷ்ணர் கோவில் அருகே வீடுகளில் தண்ணீர் வரவில்லை,' என, மக்கள் கூறியதால், அங்குள்ள தடுப்பு சுவர் மீது ஏறி நடந்து சென்றார்.
மழை பெய்து கொண்டிருந்த நிலையில் தவறி, 10 அடி பள்ளத்தில் தகரங்கள் இருந்த இடத்தில் விழுந்துள்ளர். தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

