/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கண் துடைப்புக்காக தேயிலை மானியம்' 'இன்கோ சர்வ்' உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்
/
'கண் துடைப்புக்காக தேயிலை மானியம்' 'இன்கோ சர்வ்' உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்
'கண் துடைப்புக்காக தேயிலை மானியம்' 'இன்கோ சர்வ்' உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்
'கண் துடைப்புக்காக தேயிலை மானியம்' 'இன்கோ சர்வ்' உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்
ADDED : பிப் 20, 2024 06:16 AM
குன்னுார்: நீலகிரி மாவட்ட 'இன்கோ சர்வ்' தேயிலை விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்கி உள்ளதால், சிறு விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி அடைந்து உள்ள நிலையில், செலவுகள் அதிகரித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது பட்ஜெட் அறிவிப்பில், 27 ஆயிரம் தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்க, 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், ''நீலகிரி எம்.பி., ராஜா அறிவுறுத்தியதன் பேரில், தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 'இன்கோ சர்வ்' (தமிழ்நாடு சிறுதேயிலை விவசாயிகள் தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இணையம்) உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் இரண்டு மானியம் கிடைப்பது வரவேற்பை பெற்றுள்ளது. ஜெ., ஆட்சியின் போது அனைத்து தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்கியதை போன்று தற்போதும் அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்,'' என்றார்.
விவசாயி மனோகரன் கூறுகையில்,''ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அறிவிக்கும் பட்ஜெட் இது. அதில,ம் கண்துடைப்புக்காக 'இன்கோ' உறுப்பினர்களாக உள்ள, 27 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டு பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட பட்ஜெட் இது. இதனால் சிறு விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை,''என்றார்.
படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை மோகன் கூறுகையில்,'' இன்கோ உறுப்பினர்களுக்கு மானியம் கொடுத்தன் மூலம், 30 ஆயிரம் விவசாயிகள் பயனடைவர். இது ஒரு சிறு உதவி தான். ஆனால், நீலகிரி சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விட்ட நிலையில், குறைந்த பட்ச ஆதார விலை கிடைத்திட ஆவண செய்ய வேண்டும்,'' என்றார்.

