/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரயில் நிலையத்தில் தேக்கு மர கட்டைகள் அகற்றம்; மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

ADDED : பிப் 25, 2024 10:58 PM

குன்னுார்;'குன்னுார் மலை ரயில் நிலையத்தில் அகற்றப்பட்ட தேக்கு மர சாரங்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த, குன்னுார் மலை ரயில் நிலையம் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் பன்முக தன்மையில் மகத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக செயல்படுத்தும் இத்திட்ட பணிகளை, பாரம்பரியம் மாறாமல் செயல்படுத்த மத்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில் தற்போது, ரயில் நிலைய கூரை அகற்றப்பட்டு, 16 அடி நீளமுள்ள, 50க்கும் மேற்பட்ட தேக்கு மரகட்டைகள்அகற்றப்பட்டுள்ளது. இங்கு, இரும்பு கம்பிகள் பதிக்கப்படுகிறது.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், '' நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்ட பணிகள் பாரம்பரியம் மாறாமல் புதுப்பிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குன்னுார் ரயில் நிலைய கூரையில் இருந்து அகற்றப்பட்ட தேக்கு மரங்கள் தற்போதும் எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளது. இதனை மீண்டும் அதே இடங்களில் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.