/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சம்பளம் கிடைக்காமல் குடிநீர் உதவியாளர்கள் பாதிப்பு
/
சம்பளம் கிடைக்காமல் குடிநீர் உதவியாளர்கள் பாதிப்பு
சம்பளம் கிடைக்காமல் குடிநீர் உதவியாளர்கள் பாதிப்பு
சம்பளம் கிடைக்காமல் குடிநீர் உதவியாளர்கள் பாதிப்பு
ADDED : பிப் 20, 2024 06:07 AM
பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சியில், குடிநீர் உதவியாளர்களுக்கு, கூலி வழங்காததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 103 குடிநீர் உதவியாளர்கள், குடிநீர் வினியோகம் மற்றும் சிறு பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம் தலா, 600 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. '30 நாட்கள், பணியாற்றி முறையாக குடிநீர் வினியோகம் செய்யும் உதவியாளர்களுக்கு, சம்பள உயர்வு வழங்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நேரடியாக இந்த தொகையினை வழங்காமல், ஒப்பந்ததாரர் மூலம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 3- மாதங்களாக இவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படாத நிலையில், சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பள பாக்கியை வழங்கவும், சம்பளத்தை உயர்த்தி வழங்கவும் குடிநீர் உதவியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

