தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/டி.என்.பி.எஸ்.சி., குரூப்--4 இலவச மாதிரி தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்--4 இலவச மாதிரி தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்--4 இலவச மாதிரி தேர்வு


ADDED : மார் 18, 2024 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்;அருவங்காடு கிளை நுாலகம், செந்தமிழ் சங்கம் சார்பில் வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடந்தது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்,' உள்ளிட்ட பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-4 தேர்வு ஜூன் மாதம், 9ம் தேதி நடக்கிறது.

இந்தத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அருவங்காடு கிளை நுாலகத்தில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அருவங்காடு கிளை நுாலகம் செந்தமிழ் சங்கம் சார்பில், வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச முதல் மாதிரி தேர்வு நடந்தது. அதில், 12 பேர் பங்கேற்றனர், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி தேர்வுகளை நடத்தினார் ஏற்பாடுகளை நுாலகர் ஜெயஸ்ரீ செய்திருந்தார். இன்று, (19ம் தேதி) இரண்டாம் கட்ட மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us