/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குஷ்பு உருவப்படத்தை எரித்த தி.மு.க.,வினர்
/
குஷ்பு உருவப்படத்தை எரித்த தி.மு.க.,வினர்
ADDED : மார் 13, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம் : தமிழக அரசு செயல்படுத்தி வரும், மகளிர் உரிமை தொகை திட்டத்தை பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கொச்சைப்படுத்தி பேசினார் என்று கூறி, அவரை கண்டித்து, அவரது உருவப்படத்தை எரிக்கும் போராட்டம் கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க., சார்பில் நேற்று நடந்தது.
தி.மு.க., மகளிர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் பர்வீனா,நகரச் செயலாளர் சுரேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். குஷ்புவை கண்டித்தும், பா.ஜ.,வை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பினர். குஷ்பு உருவப்படத்தை எரித்தோர் மீது கோவில்பாளையம் போலீசார் நேற்று மாலை வரை வழக்கு பதிவு செய்யவில்லை.

