/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஈட்டி மரம் வெட்டிய புகாரில் தி.மு.க., கவுன்சிலர் கைது
/
ஈட்டி மரம் வெட்டிய புகாரில் தி.மு.க., கவுன்சிலர் கைது
ஈட்டி மரம் வெட்டிய புகாரில் தி.மு.க., கவுன்சிலர் கைது
ஈட்டி மரம் வெட்டிய புகாரில் தி.மு.க., கவுன்சிலர் கைது
ADDED : ஜன 30, 2025 11:13 PM

கூடலூர்:கூடலூர் அருகே, ஈட்டி மரம் வெட்டிய புகாரில், கூடலூர் நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மைசூரு சாலையை ஒட்டிய, தனியார் இடத்தில் உள்ள கட்டடத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த, இரண்டு ஈட்டி மரங்களின் கிளைகளை வெட்ட, வருவாய் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். அந்த இரண்டு மரத்தின் பெரிய கிளைகளுடன், அனு மதியின்றி மேலும், ஒரு ஈட்டி மரத்தை வெட்டி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க, வருவாய் துறை சார்பில், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கூடலூர் வனச் சரகர் ராதாகிருஷ்ணன், வானவர் வீரமணி, மாரசாமி அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, அனுமதிக்கப்பட்ட இரண்டு ஈட்டி மரங்களின் பெரிய கிளைகளை வெட்டியதுடன், அருகில் இருந்த மற்றொரு ஈட்டி மரத்தை அனுமதி இல்லாமல் வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக, கூடலூர் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சத்தியசீலனை வனத்துறையினர், இன்று, கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

