/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதிமீறிய கட்டடங்களுக்கு 'சீல்' அகற்றப்பட்டு பணி நடப்பதால் அதிருப்தி

ADDED : பிப் 14, 2024 09:46 PM
குன்னுார்: குன்னுார் நகராட்சியில் அதிகாரிகள் வைக்கும் 'சீல்' சில ஆளும் கட்சியினரால் அகற்றப்பட்டு பணிகள் நடந்தும், நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
குன்னுார் நகராட்சியில் விதிமீறிய மற்றும் அனுமதி இல்லாத கட்டடங்கள் அதிகரித்துள்ளது.
அதில், குன்னுாரில் பல கட்டடங்களுக்கு நகராட்சி 'சீல்' வைத்து சென்ற பிறகு சில நாட்கள் கழித்து சீல் அகற்றி பல கட்டடங்கள் முழுமையாக கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், குன்னுார் பெட்போர்டு அருகே ஆளும் கட்சியினரால், கட்டப்படும் கட்டடத்திற்கு, சமீபத்தில் அதிகாரிகள் 'சீல்' வைத்த போதும், அதனை அகற்றி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
நகராட்சி கமிஷனர் பர்ஜானா கூறுகையில்,''சீல் வைக்கப்பட்ட கட்டடத்தில் மீண்டும் பணி நடந்து வருவது குறித்து எனக்கு இதுவரை தெரியாது. அலுவலகத்தில் வந்து புகார் தெரிவித்தால் அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.