/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாரபட்சம்
/
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாரபட்சம்
ADDED : டிச 20, 2024 10:33 PM
குன்னுார்; குன்னுார் அருகே மேலுார் ஊராட்சியில் உள்ள துாதுார்மட்டம் பகுதியில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி, கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சூப்ரவைசர் உட்பட பிற பணிகளை வழங்கி உள்ளார். ஏழை, எளிய மகளிரை பணிக்கு வரவிடாமல் தடுத்துள்ளார். இதனை தட்டி கேட்ட மகளிருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,'அரசால் செயல்படுத்தப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து தரப்பு மகளிருக்கும் பணி வழங்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

