/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவு பகுதிகளில் விவசாயத்திற்காக நிலங்கள் அழிப்பு! வன விலங்கு வாழ்விடங்களுக்கு பாதிப்பு
/
நிலச்சரிவு பகுதிகளில் விவசாயத்திற்காக நிலங்கள் அழிப்பு! வன விலங்கு வாழ்விடங்களுக்கு பாதிப்பு
நிலச்சரிவு பகுதிகளில் விவசாயத்திற்காக நிலங்கள் அழிப்பு! வன விலங்கு வாழ்விடங்களுக்கு பாதிப்பு
நிலச்சரிவு பகுதிகளில் விவசாயத்திற்காக நிலங்கள் அழிப்பு! வன விலங்கு வாழ்விடங்களுக்கு பாதிப்பு
ADDED : மார் 09, 2024 07:16 AM

குன்னுார் : குன்னுாரில் விவசாயம் என்ற பெயரில், யானை வழித்தடங்களை அழிக்கும் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் 'விவசாய பயன்பாட்டுக்கு' என்ற பெயரில் கனரக இயந்திரங்களை இயங்க அனுமதி பெற்று, நிலத்தை சீர்படுத்தி விதிகளை சீறி சாலை அமைக்கின்றனர். அதன்பின் அவற்றை, வீட்டுமனைகளாக விற்பனை செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்கு சில உள்ளாட்சி அமைப்புகள் துணை போகின்றனர்.
விதிமீறியதால் நடவடிக்கை
இதே போல, வனப்பகுதிகளின் அருகே உள்ள பட்டா நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு விவசாய பணிகள் துவக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த பகுதிகள் காட்டேஜ்களாக மாற்றப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு கோத்தகிரி மேடநாடு பகுதியில் சாலை அமைத்தது தொடர்பாக, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் மருமகன் சிவக்குமார் உட்பட சிலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
அதன்பின், குன்னுார் குரும்பாடி அருகே, தனியார் இடத்தில் நிலம் சமன்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொக்லைன் அனுமதி பெறப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக உரிமையாளர், பொக்லைன் பயன்படுத்தியவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, வி.ஏ.ஓ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
நீதிபதிகள் ஆய்வு
இந்நிலையில், குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதிகள் யானைகள் வாழ்விடம் மற்றும் வழித்தடமாக உள்ளதை அறிந்த நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
அதன்பின், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தி, தேசிய நெடுஞ்சாலை, 9 இடங்களில் வேகத்தடை அமைத்தும், வனத்துறையினர் சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு போர்டும் வைக்கப்பட்டது.
சிறப்பு திட்டம்
இதை தொடர்ந்து, விவசாயம் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களை தடுக்கும் விதத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயத்திற்காக பொக்லைன் மற்றும் டிராக்டர்கள் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் பட்டா இடங்களில், கட்டடங்கள் கட்ட தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பட்டா எண்களில், கட்டடம் கட்டுவதற்காக அனுமதியை ரத்து செய்யும் முறையை துவக்கினர். தற்போது இந்த நடைமுறை எதுவும் தற்போது பின்பற்றப்படுவதில்லை.
லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி அருகே உள்ள பட்டா இடங்களில் விவசாயம் என்ற பெயரில் அனுமதி பெற்று டிராக்டர்கள் மூலம் தற்போது நிலம் சமன்படுத்தப்படுகிறது.
குரும்பாடி டபுள்ரோடு காட்டேரி, காந்திபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் இருந்தும் இது போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதனை தடுக்க, பொக்லைன் அனுமதி பெறும் பட்டா எண்களில் கட்டுமானத்திற்கு தடை விதித்து, உறுதி மொழி பத்திரமும் எழுதப்பட வேண்டும்,'' என்றார்.

