ADDED : நவ 14, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த போராட்டத்திற்கு, நீலகிரி மாவட்ட தலைவர் சபியுதீன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் ரஹீம் பங்கேற்று பேசினார்.
அதில், 'வக்பு வாரிய சட்ட திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டது.

