/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் பஜாரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்...போக்குவரத்து நெரிசல்! போலீசார் நடவடிக்கை எடுத்தால் தீர்வு நிச்சயம்
/
மஞ்சூர் பஜாரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்...போக்குவரத்து நெரிசல்! போலீசார் நடவடிக்கை எடுத்தால் தீர்வு நிச்சயம்
மஞ்சூர் பஜாரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்...போக்குவரத்து நெரிசல்! போலீசார் நடவடிக்கை எடுத்தால் தீர்வு நிச்சயம்
மஞ்சூர் பஜாரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்...போக்குவரத்து நெரிசல்! போலீசார் நடவடிக்கை எடுத்தால் தீர்வு நிச்சயம்
ADDED : பிப் 25, 2024 11:24 PM

மஞ்சூர்;மஞ்சூர் பஜாரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குந்தா தாலுகாவின் தலைமையிடமாக, மஞ்சூர் பகுதி அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள, 35 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மஞ்சூர் வருகின்றனர்.
கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னுார் பகுதிகளிலிருந்து ஏராளமான அரசு பஸ் வந்து செல்கிறது. தவிர, இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தனியார் வாகனங்கள் பிற பகுதிகளிலிருந்து கொண்டு வருகின்றன.
பஜாரில் நாள்தோறும் நெரிசல்
இந்நிலையில், குறுகலாக உள்ள பஜார் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மஞ்சூர்-கீழ்குந்தா சாலை மற்றும் மேல்பஜார் சாலைகளில் இருப்புறம் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு, நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலில் சிக்கும் அரசு பஸ்கள் தாமதமாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலை மற்றும் மாலை வேளைகளில் தாமதமாக செல்லும் பஸ்களால் பல்வேறு இடையூறுகள் பயணிகளுக்கு ஏற்படுகிறது. சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களும் இப்பகுதியில் வந்து நெரிசலில் சிக்குவதால், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பால் தொல்லை
பொது மக்கள் கூறுகையில், ''கீழ்குந்தா சாலை, மேல்பஜார் சாலைகளில் விதிகளை மீறி நோ-பார்க்கிங்கில் பல மணி நேரம் நிறுத்தப்படும் வாகனங்களை, போலீசார் அடையாளம் கண்டு அபராதம் விதிக்க வேண்டும். புறநகர் பகுதிகளை உள்ளூர் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடீரென முளைத்துள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைதுறையினர் ஆய்வு மேற்கொண்டு அகற்ற வேண்டும். பயணிகள், பள்ளி மாணவர்கள் இடையூறின்றி பஸ்களில் ஏறி, இறங்க போலீசார் இட வசதி ஏற்படுத்த கொடுக்க வேண்டும். இப்பணிகளை போலீசார் நாள்தோறும் மேற்கொண்டால், போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்,'' என்றனர்
மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில், '' மஞ்சூர் பஜாரில் எஸ்.ஐ., தலைமையில் நாள்தோறும் போலீசார் பணியில் உள்ளனர். கீழ்குந்தா சாலை, மேல்பஜார் சாலைகளில் கூடுதல் போலீசார் பணிய மர்த்தி சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆய்வு செய்யப்படும். வாகனங்களை நாள் முழுவதும் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

