/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பர்னஸ் ஆயில் இன்ஜின்' டீசலுக்கு மாற்றம்; இரண்டாம் சோதனை ஓட்டமும் வெற்றி
/
'பர்னஸ் ஆயில் இன்ஜின்' டீசலுக்கு மாற்றம்; இரண்டாம் சோதனை ஓட்டமும் வெற்றி
'பர்னஸ் ஆயில் இன்ஜின்' டீசலுக்கு மாற்றம்; இரண்டாம் சோதனை ஓட்டமும் வெற்றி
'பர்னஸ் ஆயில் இன்ஜின்' டீசலுக்கு மாற்றம்; இரண்டாம் சோதனை ஓட்டமும் வெற்றி
ADDED : அக் 28, 2024 11:29 PM

குன்னுார் : நீலகிரி மலை ரயிலின், 'பர்னஸ் ஆயில்' இன்ஜின் டீசலுக்கு மாற்றப்பட்டு நடந்த இரண்டாம் சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது.
நூற்றாண்டுகளாக இயங்கும் நீலகிரி மலை ரயில் துவங்கிய போது, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின்கள் இயக்கப்பட்டது. கடந்த, 2002-ல் பர்னஸ் ஆயிலில் இயங்கும் நீராவி இன்ஜின்களாக மாற்றப்பட்டு இயங்கியது.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பர்னஸ் ஆயில் பயன்படுத்த மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்த பிறகு, குன்னுார் பணிமனையில், 'சீனியர் டெக்னீசியன்' மாணிக்கம் தலைமையில், இரு பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின்கள் ஏற்கனவே டீசலுக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, இரு பர்னஸ் ஆயில் இன்ஜின்கள் திருச்சி பொன்மலை பணிமனையில் மாற்றப்பட்டது.
மீதமிருந்த, '37399' எண் கொண்ட கடைசி பர்னஸ் ஆயில் இன்ஜின் டீசலுக்கு மாற்றப்பட்டு ரன்னிமேடு வரை முதல் சோதனை ஓட்டம் நடந்தது.
அதே இன்ஜினின் இரண்டாவது சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை நடந்தது. அதில், 'ரேக்பார்' கொண்ட தண்டவாளத்தில் எளிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் குன்னுார் வந்து சேர்ந்தது.
இந்த இன்ஜினுடன், 4 புதிய பெட்டிகளும் சேர்த்து கொண்டு வரப்பட்டது. இந்த டீசல் நீராவி இன்ஜின், வெள்ளோட்டம் முழு வெற்றி பெற்றதால் மலை ரயில் சேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி மலை ரயிலில் பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின்கள் அனைத்தும், டீசல் நீராவி இன்ஜின்களாக மாற்றப்பட்டுள்ளது.
பர்னஸ் ஆயிலில் அதிகம் புகை வெளியிடப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு இருந்த நிலையில், டீசல் நீராவி இன்ஜின்களில் இருந்து புகை இல்லாமல் வருவது சிறப்பு பெற்றுள்ளது.
மலை ரயில் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில், 'மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்பட்டுள்ள, '37384' எண் கொண்ட, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜினை பராமரித்து இயக்கவும், நம் நாட்டில் தயாரித்த நிலக்கரி நீராவி இன்ஜினை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

