ADDED : மே 05, 2025 10:12 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்; பந்தலுார் பஜார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, இரும்புபாலம், இன்கோ தேயிலை தொழிற்சாலை, இன்கோநகர் பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் ஆட்டோ, தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை கொண்டு செல்லப்படும் லாரிகள் சென்று வருகிறது. சிறிய மற்றும் மேட்டுப்பாங்கான சாலையாக உள்ள இந்த பகுதியில், கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
