/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரண தொகை
/
சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரண தொகை
சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரண தொகை
சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரண தொகை
ADDED : ஜன 01, 2024 09:13 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
பந்தலுார் அருகே ஏலமன்னா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சரிதா, 26. இவர் கடந்த, 20ம் தேதி வீட்டு கதவை திறந்த போது, வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுத்தை தாக்கியது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த, 27ஆம் தேதி காலை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அன்று இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு வனத்துறையினர் மூலம் கொண்டுவரப்பட்டு, 1:00 மணிக்கு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வனச்சரவர்கள் ரவி, அய்யனார், சஞ்சீவி, வனவர் பெலிக்ஸ், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், கவுன்சிலர் முரளி உள்ளிட்டோர் உயிரிழந்த சரிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, வனத்துறை மூலம், 5- லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் மற்றும் வனத்துறை பாதுகாப்புடன் உயிரிழந்த சரிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

