/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண தினம்
/
இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண தினம்
ADDED : பிப் 14, 2024 11:34 PM
ஊட்டி : ஊட்டி நகரம், மேற்கு நகரம், வடக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் சார்பில், சமுதாய சமர்ப்பண தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு, இந்து கடவுள்களை இழிவு படுத்திய போது, இந்துமுன்னணி களத்தில் இறங்கி போராடி, இந்து தர்மத்தை பாதுகாக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இந்து தர்மத்தை காத்த, முன்னணியின் முதல் தலைவர் தாணுலிங்க நாடாரின் பிறந்த தினம், சமுதாய சமர்ப்பண தினமாக கொண்டாடப்படுகிறது.
எனவே, இந்துக்கள் ஆக்கப்பூர்வமான செயல் மற்றும் செல்வத்தை அளித்து, தெய்வீக பணியில் ஈடுபடுவது அவசியம்.
அதன்படி, மக்கள் அளிக்கும் உதவி, திருச்சி மற்றும் திருப்பூர் பகுதி குருகுலத்தில் பராமரித்து வரும், 76 மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

