UPDATED : ஜூன் 21, 2026 06:50 PM
ADDED : ஜூன் 21, 2026 06:32 PM

அ நிறம் | அளவு
பந்தலூர்:பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரங்களில், கடும் மேகமூட்டம் நிலவுவதால், வாகனங்களை முகப்பு விளக்கு எரியவிட்டு வாகன ஓட்டிகள் சென்றனர்.
பந்தலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில், பகல் நேரங்களில் கடும் மேக மூட்டம் நிலவி வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவி வருவதுடன், வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் மெதுவாக இயக்க சென்றனர்.
வெளியூர் வாகன ஓட்டுநர்கள், சாலையின் நிலை குறித்து தெரியாத நிலையில், சாலையின் நடுவில் உள்ள வெள்ளை நிற கோடுகள் உதவியுடன் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டது.
