/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்வாய்க்குள் அடைப்பு; நடைபாதைக்கு பாதிப்பு
/
கால்வாய்க்குள் அடைப்பு; நடைபாதைக்கு பாதிப்பு
ADDED : நவ 07, 2024 08:10 PM

குன்னுார் ; குன்னுார் பர்லியார் பகுதியில் கால்வாயில் மரத்துண்டால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னுார் பர்லியார் பகுதியில் நுாற்றுகணக்கான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் நடைபாதை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில், மரத்துண்டு சென்று சிக்கியுள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் ஊராட்சிக்கு பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்கள் கூறுகையில், 'இந்த மரத்துண்டு மட்டுமல்லாமல், பாறை கற்களும் கால்வாயில் சென்று அடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய மழையில் வெள்ளம் நடைபாதையில் ஓடுவதுடன், மண் மற்றும் சேறு தேங்கி நடமாட சிரமம் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்,' என்றனர்.

