/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம்
/
அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம்
ADDED : ஆக 07, 2025 09:02 PM
ஊட்டி; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், பல்வேறு அரசு திட்டங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 20, 21 மற்றும் 22 வது வார்டு பகுதிகளுக்கு, ஊட்டி ஸ்ரீனிவாச பெருமாள் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில்,'பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் முகாமில் அரசுத்துறை அரங்குகள் அமைந்துள்ள இடம் தொடர்பாக அறிவிப்பினை தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும். பல்வேறு அரசு திட்டங்க ளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேடு களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் தொடர்பான அறிவிப்பினை தெரிவிக்க வேண்டும்.
முகாமில், வழங்கப்படும் மனுக்கள் மீது, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்,' என, அலுவலர்களிடம் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் சுகாதார துறையின் சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை நேரில் பார்வையிட்டார். ஊட்டி நகராட்சி கமிஷனர் வினோத், தாசில்தார் சங்கர் கணேஷ், ஊட்டி நகர் நல அலுவலர் சிபி, திட்டக்குழு உறுப்பினர் முஸ்தபா உட்பட பலர் பங்கேற்றனர்.

