/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : பிப் 25, 2024 10:47 PM

மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த பந்த சேவையில், ஏராளமான பக்தர்கள், தீப்பந்தங்களை எடுத்து வந்து, அரங்கநாத பெருமாளுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று தண்ணீர் மற்றும் தீப்பந்த சேவை நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், வடகேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவாக, பக்தர்கள், தீப்பந்தங்களை எடுத்து வந்து, 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஆடிக் கொண்டு, கோவிலுக்கு சென்று அரங்கநாத பெருமாளுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இன்று இரவு, (26ம் தேதி) தெப்போற்சவமும், 27ல் சந்தான சேவையும், 28ம் தேதி விழா நிறைவும் நடைபெற உள்ளது.