/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடுத்தடுத்து கைவரிசை 4 பேர் கைது: பொருட்கள் பறிமுதல்
/
அடுத்தடுத்து கைவரிசை 4 பேர் கைது: பொருட்கள் பறிமுதல்
அடுத்தடுத்து கைவரிசை 4 பேர் கைது: பொருட்கள் பறிமுதல்
அடுத்தடுத்து கைவரிசை 4 பேர் கைது: பொருட்கள் பறிமுதல்
ADDED : பிப் 25, 2024 10:56 PM
ஊட்டி:முத்தோரை சுற்றுப்புற பகுதிகளில், டிராக்டரில் உதிரி பாகங்கள் திருடிய வழக்கில், கல்லுாரி மாணவர் உட்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி முத்தோரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். 38, விவசாயம் செய்து வருகிறார். சொந்தமாக, 6 டிராக்டர் வைத்துள்ளார்.
இவருடைய வீட்டின் அருகே டிராக்டர்கள் நிறுத்த இட வசதி இல்லாததால், முத்தோரை பகுதியில் டிராக்டர்களை நிறுத்தி செல்வது வழக்கம்.
மறுநாள் வந்து பார்த்தபோது டிராக்டரில் உள்ள 'பிரண்ட் ஆங்கில், டோர், ஏணி' உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. சுரேஷ் ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.ஐ., சிவகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், டிராக்டரில் உதிரி பாகங்கள் திருடியது ஊட்டியை சேர்ந்த ராஜ்குமார், 34, சூர்யா, 21, சுபாஷ், 21, என தெரிய வந்தது.
இதேபோல் இவர்கள் முத்தோரை பகுதியை சேர்ந்த நாகராஜ், செந்தில், மாதேஷ் ஆகியோரின் டிராக்டர்களிலும் உதிரிபாகங்கள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
பின், போலீசார், 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் திருட்டு பொருட்களை வாங்கியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தர்,45, என்பவரையும் கைது செய்தனர்.
திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிற திருட்டு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

