/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐயப்பன் கோவில் வருடாந்திர திருவிழா
/
ஐயப்பன் கோவில் வருடாந்திர திருவிழா
ADDED : டிச 30, 2025 07:00 AM

பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில், வருடாந்திர திருவிழா மற்றும் மண்டல பூஜை அதிகாலை, 5-:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து ஐயனுக்கு நெய் அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை அடுத்து ஸ்ரீ தர்மசாஸ்தா பஜனை குழுவினரின் ஐயப்பன் பஜனை நடந்தது. தொடர்ந்து, அன்ன பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது .
மாலை, 6:00-மணிக்கு, பந்தலுார் ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்து திருவிளக்கு ஊர்வலம், பாலகொம்பு மற்றும் கரக ஊர்வலம் துவங்கியது.
செண்டை மேளம் மற்றும் தப்பாட்டத்துடன் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக, ஐயப்பன் கோவிலில் வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் குருதி சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெற்றது. பூஜை மற்றும் ஊர்வலத்தில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

