/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை: அடுத்த வாரம் துவக்கம்
/
சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை: அடுத்த வாரம் துவக்கம்
சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை: அடுத்த வாரம் துவக்கம்
சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை: அடுத்த வாரம் துவக்கம்
ADDED : ஜன 13, 2024 04:05 PM

சென்னை: அடுத்த வாரம் முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை துவங்கப்படும் என சென்னை விமான நிலைய இயக்குநர் கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதனைத்தொடர்ந்து கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் வசதிக்காக அயோத்தியில் கட்டப்பட்ட விமான நிலையத்தை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதேபோல், லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்து உள்ளது.