/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நீலகிரி தொகுதி எம்.பி.,க்கு கண்டனம்

ADDED : பிப் 02, 2024 11:08 PM

ஊட்டி:'பட்டியலின மாணவி மீது வன்கொடுமையை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகன் மற்றும் மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை' என, குற்றம் சாட்டி, அ.தி.மு.க., சார்பில் ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் வினோத் தலைமை தாங்கி பேசுகையில், ''தி.மு.க., ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமையை ஏவி, கொடூர தாக்குதல் நடத்திய தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் மற்றும் மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விலை அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், எம்.ஜி.ஆர்., குறித்து அவதுாறாக பேசியதாகக் கூறி, நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து, அவருடைய உருவப்படத்தை செருப்பால் அடித்தனர்.
அதில், அ.தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் அப்சரா ரெட்டி, முன்னாள் எம்.பி. அர்ஜுனன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், மாவட்ட துணை செயலர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.