/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தா விட்டால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
/
தனியார் விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தா விட்டால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
தனியார் விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தா விட்டால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
தனியார் விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தா விட்டால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜன 02, 2024 12:49 AM
கோவில்பாளையம்;'தனியார் விடுதிகளில் கட்டாயமாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்,' என போலீசார் அறிவுறுத்தினர்.
கோவில்பாளையம், இன்போ தொழில்நுட்பக் கல்லுாரியில், தனியார் விடுதி, கல்லூரி விடுதி நிர்வாகிகள், மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்துள்ளோர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கல்லுாரி முதல்வர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் பேசியதாவது:
தனியார் விடுதி, கல்லுாரி விடுதி நிர்வாகங்கள் மற்றும் வீடுகளை கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளோர் கண்டிப்பாக தங்கள் விடுதி மற்றும் வீட்டு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரம் ஒரு முறை அறைக்கு உள்ளே சென்று பார்க்க வேண்டும். தங்கியுள்ள மாணவர்களின் ஆதார் மற்றும் அவர்களுடைய பெற்றோர் மொபைல் எண், முகவரி சான்று பெற்று வைத்திருக்க வேண்டும்.
சட்டவிரோத நடவடிக்கை குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்தும் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தங்கள் விடுதிகளில் எவ்வளவு மாணவர்கள், எந்த கல்லுாரி மாணவர்கள் என்னும் விபரங்களை கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவிக்க வேண்டும். சில பகுதிகளில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் இளைய தலைமுறையினர் வாழ்க்கை திசை மாறுகிறது, போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்கள் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதை தடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. எனவே போலீசார் உடன் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

