/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டீசல் இன்றி சாலை நடுவே நின்ற லாரி; மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

ADDED : அக் 30, 2024 08:10 PM

கூடலுார் : கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், டீசல் இன்றி லாரி நின்றதால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் நகரில் தீபாவளி பண்டியை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக, மக்கள் குவிந்தனர். மேலும், சமவெளி பகுதிகளிலும் கர்நாடகா, கேரளாவில் இருந்து கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து கேரளா செல்லும் கனரக லாரி ஒன்று நேற்று மதியம், 2:30 மணிக்கு, கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே டீசல் இன்றி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நின்றது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி, கர்நாடகா மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
போக்குவரத்து போலீசார், வாகனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கேனில் டீசல் வாங்கி வந்து டேங்கில் ஊற்றி லாரியை ஓட்டி சென்றனர். தொடர்ந்து, 3:00 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.