தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பராமரிப்பு இல்லாத குளத்தால் பயனில்லை

பராமரிப்பு இல்லாத குளத்தால் பயனில்லை

பராமரிப்பு இல்லாத குளத்தால் பயனில்லை


ADDED : ஏப் 11, 2025 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார் ;கூடலுார் புத்துார்வயல் அருகே, பராமரிப்பின்றி கிடக்கும், கோவில் குளத்தை சீரமைத்தால், மழைநீர் சேமிக்க முடியும்.

கூடலுார் புத்துார் அருகே உள்ள மகாவிஷ்ணு கோவிலுக்கு சொந்தமான குளம் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. பராமரிப்பின்றி இருந்த குளத்தை சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீமதுரை ஊராட்சி சார்பில்,100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சீரமைத்தனர். அதில், மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் உயர்ந்தது. நீரை சிலர் விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, குளம் முழுவதும் செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது.

இதனால், மழை காலங்களில் மழைநீர் சேமிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, 100 நாள் வேலை திட்டத்தின் மூலம், குளத்தை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'குளம் கோவிலுக்கு சொந்தமானது என்றாலும், அதில் தேங்கும் நீரை, சிலர் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு இல்லாத குளத்தை, பருவமழைக்கு முன் சீரமைப்பதன் மூலம், மழை நீரை சேகரிக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீரும் உயரும். எனவே, ஊராட்சி நிர்வாகம், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளத்தை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us