/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முனீஸ்வரர் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
முனீஸ்வரர் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
முனீஸ்வரர் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
முனீஸ்வரர் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 09, 2025 11:38 PM
கோத்தகிரி : கோத்தகிரி பில்லிக்கம்பை கோவில் மேடு ஸ்ரீ சக்தி முனீஸ்வரர் திருக்கோவில், 69வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு கடந்த, 28ம் தேதி காலை, 9:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, 4ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு சக்தி அழைப்பு சிறப்பு பூஜை நடந்தது.
மறுநாள் (5ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, கங்கையில் இருந்து கரக ஊர்வலம், பகல், 12:00 மணிக்கு, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, வான வேடிக்கை இடம் பெற்றது.
7ம் தேதி, 10:00 மணிக்கு பொங்கல் பூஜை, 12:00 மணிக்கு, ஐயனுக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து, தாரை தப்பட்ட கச்சேரி இடம் பெற்றது.
மாலை, 6:00 மணிக்கு, கரகம் கங்கையில் கரை சேர்த்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து மஞ்சள் நீராடல் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, சிறுவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஐயனை வழிபட்டனர். 12ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில்மேடு ஸ்ரீ முனீஸ்வரர் இளைஞர் சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

