/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் குருத்தோலை ஞாயிறு பேரணி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
/
ஊட்டியில் குருத்தோலை ஞாயிறு பேரணி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ஊட்டியில் குருத்தோலை ஞாயிறு பேரணி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ஊட்டியில் குருத்தோலை ஞாயிறு பேரணி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 14, 2025 06:57 AM

ஊட்டி : ஊட்டியில் குருத்தோலை ஞாயிறையொட்டி நடந்த பேரணியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது, இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
நடப்பாண்டு தவக்காலம் மார்ச, 5ம் தேதி துவங்கியது. நீலகிரியில் உள்ள தேவாலயங்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. நேற்று மாவட்ட முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது.
ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயம், சி.எஸ்.ஐ., துாய கிறிஸ்துவ ஆலய தந்தையர்கள் தலைமையில், குருததோலை ஞாயிறை ஒட்டி சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு பவனி தொடங்கியது.
பேரணி மத்திய பஸ் ஸ்டாண்ட் வழியாக புனித தாமஸ் ஆலயம் வரை சென்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குருத்தோலைகளை கையில் ஏந்தி பாடல்களைப் பாடியபடி பவனியாக சென்றனர்.