தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பராமரிப்பு இல்லாத தடுப்பணையால் பயனில்லை

 பராமரிப்பு இல்லாத தடுப்பணையால் பயனில்லை

 பராமரிப்பு இல்லாத தடுப்பணையால் பயனில்லை


ADDED : மார் 07, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் நாடுகாணி அருகே, கோழிக்கோடு சாலையோரம் பராமரிப்பு இல்லாத தடுப்பணைகளை சீரமைக்க வலியுறுத்தப்பட்டது.

கூடலுார் வனக்கோட்டத்தில், கோடையில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்தை ஒட்டிய நீரோடை மற்றும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்துள்ளனர். பல தடுப்பனைகள் சேதமடைந்தும், பல தடுப்பணைகள் முட்புதர்கள் சூழ்ந்தும் பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில், கூடலுார் கோழிக்கோடு சாலை, குடோன் - நாடுகாணி இடைப்பட்ட சாலையோர வனத்தில், வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அமைக்கப்பட்ட இரண்டு தடுப்பணைகளில் ஒன்று சேதமடைந்தும், மற்றொன்று முட்புதர்கள் சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

கோடைகாலத்திலும் பசுமையாக காணப்படும் இப்பகுதிக்கு உணவு, குடிநீர்தேடி வரும் காட்டு யானைகள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றன.

மக்கள் கூறுகையில், 'புளியம்பாறை, கரியன் சோலையிலிருந்து, பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தை கடந்து வரும் யானைகள், இப்பகுதி வனத்தில் முகாமிட்டு, கோடையிலும் உணவு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.

தற்போது, இந்த தடுப்பணைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், யானைகள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றன.

எனவே, தடுப்பணைகளை சீரமைத்து, அவைகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us