/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
600 கட்டட உரிம விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையில்... நிராகரிப்பு!விதிமுறைக்கு மாறாக வரைப்படம் தயாரித்ததால் நடவடிக்கை
/
600 கட்டட உரிம விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையில்... நிராகரிப்பு!விதிமுறைக்கு மாறாக வரைப்படம் தயாரித்ததால் நடவடிக்கை
600 கட்டட உரிம விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையில்... நிராகரிப்பு!விதிமுறைக்கு மாறாக வரைப்படம் தயாரித்ததால் நடவடிக்கை
600 கட்டட உரிம விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையில்... நிராகரிப்பு!விதிமுறைக்கு மாறாக வரைப்படம் தயாரித்ததால் நடவடிக்கை
ADDED : பிப் 07, 2024 02:13 AM
ஊட்டி:நீலகிரியில், கட்டட உரிமம் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில், 600 விண்ணப் பங்கள் மாவட்ட கட்டட குழுவால் ஆரம்ப நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், கட்டடக்கலை மற்றும் அழகுணர்வு காப்பு கூறுகள் குழுமம் மற்றும் மலையிட பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றின் ஒப்புதலின் அடிப்படையில், கட்டட அனுமதி மற்றும் மனை பிரிவு அனுமதி வழங்கப்படுகிறது.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், 2500 ச.அ., பரப்பளவு குடியிருப்பு கட்டடங்களுக்கு மட்டும் நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர், ஊராட்சி தலைவர் ஆகியோர் கட்டட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட, 40 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. தவிர, வணிகரீதியாக செயல்பட்டு வரும், 50 கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
600 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
அதேபோல, மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களை அழித்து அனுமதியற்ற முறையில் மனைப்பிரிவுகள் உருவாக்கி விற்பனை செய்யப்பட்ட, 10 மனை பிரிவுகளுக்கு பணிநிறுத்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான கட்டடக்குழு கூட்டத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட கட்டட உரிம விண்ணப்பங்களில், 3 துறைகளின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில் கடந்தாண்டு மட்டும், 600 விண்ணப்பங்கள் மாவட்ட கட்டட குழுவின் சார்பில், ஆரம்பநிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல, கடந்த, 2022ம் ஆண்டில, 1,207 விண்ணப்பங்கள் ஆரம்பநிலையில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில், விளை நிலங்களை அழித்து, அனுமதி அற்ற முறையில் மனைபிரிவுகள் அமைக்கப்பட்டு வருவதாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. 'மாஸ்டர் பிளான்' சட்ட விதிகளின் படி, முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் கட்டப்படும் மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாற வேண்டாம். முறையான கட்டட அனுமதி பெறப்பட்ட பின், கட்டட பணி துவக்கப்பட வேண்டும். விதிமுறைக்கு மாறாக வரைபடம் தயாரிக்கும் கட்டட பொறியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்

