/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு ஐயப்பன் கோவில் 51வது பிரதிஷ்டை விழா துவக்கம்
/
அருவங்காடு ஐயப்பன் கோவில் 51வது பிரதிஷ்டை விழா துவக்கம்
அருவங்காடு ஐயப்பன் கோவில் 51வது பிரதிஷ்டை விழா துவக்கம்
அருவங்காடு ஐயப்பன் கோவில் 51வது பிரதிஷ்டை விழா துவக்கம்
ADDED : பிப் 25, 2024 11:08 PM
குன்னுார்;குன்னுார் அருவங்காடு ஐயப்பன் கோவிலில், 51வது ஆண்டு பிரதிஷ்டை விழா துவங்கியது.
குன்னுார் அருகே அரவங்காடு பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், 51ம் ஆண்டு பிரதிஷ்டை விழா, பனவூர் பரமேஸ்வரர் நம்பூதிரி தலைமையில் நேற்று முன்தினம் துவங்கியது.
காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம் கொடியேற்றம், உச்ச பூஜை, தீபாராதனை, அருவங்காடு கைரளியின் சரணாபிஷேகம், கான கைரளி இசை நிகழ்ச்சி, ஆகியவை நடந்தன.
நேற்று கணபதி ஹோமம் கொடிமர பூஜை, அலங்கார பூஜை அருவங்காடு நாட்டிய நடன பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சி, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பகவதி சேவை பிரசாத விநியோகம் ஆகியவை நடந்தன.
திருவிழா நாளான இன்று (26ம் தேதி) பகல், 12:00 மணிக்கு பிரசாதம் வினியோகம், மாலை, 4:00 மணிக்கு ஐயப்பன் திருவீதி உலா நடக்கிறது.
இரவு, 8:00 மணிக்கு மகா தீபாராதனை, கொடி இறக்கம், பிரசாத விநியோகம் ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை ஐயப்ப பஜன் சங்கம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

