/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை வாய்ப்பு முகாமில் 3,575 பேருக்கு பணி ஆணை; அரசு தலைமை கொறடா தகவல்

ADDED : ஆக 03, 2025 08:29 PM

ஊட்டி; நீலகிரியில் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலாக, 3,575 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தலைமை கொறடா தெரிவித்தார்.
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அரசு தலைமை கொறடா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சயில், அரசு தலைமை கொறடா ராமசந்திரன் பேசுகையில், ''படித்து முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரியில் நடந்த, 8 வேலை வாய்ப்பு முகாம்களில், 3,575 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 109 ஆண்களும், 138 பெண்களுக்கும்,5 மாற்றுத்திறனாளிகள் ஆண்களும், 4 மாற்றுத்திறனாளிகள் பெண்கள் என, மொத்தம, 256 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. '' என்றார்.
சப்-கலெக்டர் அபிலாஷ் கவுர், மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற் றனர்.