/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவில் 32 சி.சி.டி.வி., கேமராக்கள்
/
தாவரவியல் பூங்காவில் 32 சி.சி.டி.வி., கேமராக்கள்
ADDED : பிப் 14, 2024 09:44 PM

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 32 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளது
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் ஏப், மே மாதங்களில் கோடை சீசன். செப்., மற்றும் அக்., மாதங்களில் இரண்டாவது சீசன் நடக்கிறது. பூங்காவுக்கு ஆண்டுதோறும் சராசரியாக, 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நடப்பாண்டு சீசனை ஒட்டி, பூங்காவில் மண் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு பணி, தொட்டிகளில் மண் நிரப்பும் பணி, மலர் நாற்றுக்களுக்கு உரம் கலந்த தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பூங்கா அருகே உள்ள ராஜ்பவன் மற்றும் பூங்காவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், 'பூங்காவின் நுழைவு வாயில், பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, பிரதான புல்தரை மைதானம், இத்தாலியன் கார்டன், தோட்டக்கலை அலுவலகம், ராஜ்பவன் சாலை,' என, பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், 32 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளது.
அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி.., மானிட்டரில் கண்காணிப்பு பணி நடக்கிறது.

