/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வியாபாரிகளுக்காக 180 தற்காலிக கடைகள்; நேற்று முதல் செயல்பட துவங்கியது
/
வியாபாரிகளுக்காக 180 தற்காலிக கடைகள்; நேற்று முதல் செயல்பட துவங்கியது
வியாபாரிகளுக்காக 180 தற்காலிக கடைகள்; நேற்று முதல் செயல்பட துவங்கியது
வியாபாரிகளுக்காக 180 தற்காலிக கடைகள்; நேற்று முதல் செயல்பட துவங்கியது
ADDED : பிப் 08, 2024 10:02 PM

ஊட்டி : ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளுக்கான பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்தது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் முதற்கட்டமாக, 180 புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பழைய கடைகள் இடிக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
புதிய கடைக்கான கட்டுமான பணிகள் முடியும் வரை, வியாபாரிகளுக்காக ஊட்டி ஏ.டி.சி., பகுதியை ஒட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது.
அங்கு, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கான அனைத்து வசதிகள் ஏற்படுத்தியதுடன், வியாபாரிகளுக்கான வசதிகளும் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்ததால் பணிகள் முழுமையாக முடிந்தது. நேற்று முதல் மளிகை கடை மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட துவங்கியது.
கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,''ரேஸ்கோர்ஸ் பகுதியில், 180 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள்; வியாபாரிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, 20க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் திறக்கப்பட்டது. படிப்படியாக பிற கடைகள் திறக்கப்படும்,'' என்றார்.

